'இன்று அண்ணன், நாளை மன்னன்': போஸ்டர் ஒட்டி தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

நாளை தமிழகத்தின் முடி சூடா மன்னன் என தலைமைச் செயலகத்தின் படம் ஆளுயர மாலை சூடி உள்ள நடிகர் விஜயின் புகைப்படம் உள்ளிட்டவைகளுடன் வாரிசு திரைப்படத்தை வரவேற்று விஜய் மக்கள் இயக்கத்தினர் நிலையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி, நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் வரும் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படங்களின் ரிலீசை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின் போதும் நடைபெறும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை போல, வாரிசு பாடல் விளியீட்டு நிகழ்விலும் நடிகர் விஜய் பல்வேறு சூசகமான அரசியல் வசனங்கள் பேசியது ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் வரக்கூடிய 11ஆம் தேதி வெளியாகும் வாரிசு திரைப்படத்திலும் சூசகமான பல்வேறு அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன

மேலும் நடிகர் விஜய் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு ரசிகர்கள் சந்திப்பு ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் 11ம் தேதி வெளியாக உள்ள வாரிசு படத்தை வரவேற்று நாங்குநேரி ஒன்றிய தலைமை இளைஞர் அணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகர் பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

varisu

அவற்றில் ‘தளபதி அவர்களின் வாரிசு மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா காண வாழ்த்துகிறோம்’ எனவும் ‘இன்று திரையுலகில் எங்கள் அண்ணன், நாளை தமிழகத்தின் முடிசூடா மன்னன்’ என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த போஸ்டர்களில் வெற்றி மாலை சூடியது போன்ற விஜயின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதுடன் போஸ்டரில் பின்னூட்ட படமாக தலைமைச் செயலகமும் வைக்கப்பட்டுள்ளது. 

varisu

அரசியல் களத்திற்கு நடிகர் விஜய் வரவேண்டும் என பல ஆண்டுகளாக ரசிகர்கள் தெரிவித்து ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் தலைமைச் செயலகம் வடிவமைப்பிலும் முதலமைச்சர் என்ற வாசகங்கள் இடம் பெற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இந்த போஸ்டர்கள் குறைந்து வந்துள்ள நிலையில் மீண்டும் அரசியல் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அசுர வேகம் எடுத்துள்ளன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.