கடலூர்: என்எல்சி விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், என்எல்சியை வெளியேற்றக் கோரியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றும், நாளையும் அவர் கடலூர் மாவட்டத்தில் நடைபயணம் செய்து, மக்களிடையே ஆதரவை திரட்டி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். வன்னியர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் அவரது நடைபயணம் அவ்வப்போது நடைபெற்று […]
