கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சிறை ஒன்றிற்குள் ஒரு புறா பறந்துவந்தது. அந்த புறாவின் கழுத்தில் இருந்த பொருள் என்னவென்று அறிந்த அதிகாரிகள் திகைத்துப்போனார்கள்.
புறா விடு தூது
புறாவின் கால்களில் கட்டிய ஓலை அல்லது காகிதத்தில் செய்திகள் அனுப்பப்படும் வழக்கம் உலக நாடுகள் பலவற்றில் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது.
அந்த காலகட்டம் திரும்பிவிட்டதோ என சந்தேகிக்கும் சம்பவம் ஒன்று சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சிறை ஒன்றில் நிகழ்ந்தது.

Ben Nelms/CBC
சிறைக்குள் பறந்துவந்த புறா
சென்ற வாரம், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள அந்த சிறையில் கைதிகள் விளையாடும் அல்லது காற்று வாங்கும் பகுதியில் காவலுக்கு நின்ற அதிகாரிகள், புறா ஒன்று சிறைக்குள் பறந்துவருவதைக் கவனித்துள்ளார்கள்.
அந்த புறாவின் முதுகில், முதுகுப்பைப் போன்ற ஒரு பொருள் இருப்பதைக் கவனித்த அதிகாரிகள், நீண்ட நேர முயற்சிக்குப்பின் அந்த புறாவைப் பிடித்துள்ளார்கள்.
அப்போது அந்த புறாவின் முதுகில் இணைக்கப்பட்டிருந்த பைக்குள் ஒரு சிறிய பொட்டலம் இருப்பதைக் கவனித்த அதிகாரிகள் அதற்குள் என்ன இருக்கிறது என்று பரிசோதிக்க, அதற்குள் போதைப்பொருள் ஒன்று இருப்பது தெரியவரவே, அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

TimesMachine/The New York Times
சமீப காலமாக ட்ரோன்கள் மூலம் சிறைக்குள் போதைப்பொருட்கள் போடப்படுவதை அறிந்த அதிகாரிகள், அவற்றைக் கட்டுப்படுத்தியதால், போதைப்பொருள் விற்பவர்கள் தற்போது பழங்கால முறையான புறா மூலம் பொருட்களை அனுப்பும் முறைக்கு திரும்பிவிட்டார்கள் போலும்!
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

Ben Nelms/CBC

Ben Nelms/CBC