சர்வானந்த்துக்கு ஜன.,26ல் திருமண நிச்சயதார்த்தம் : முன்னாள் எம்எல்ஏவின் பேத்தியை மணக்கிறார்

‛எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த். அதைத்தொடர்ந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை சமீபத்தில் வெளியான கணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் தொடர்ந்து தெலுங்கில் பிசியாக நடித்து வரும் இவர், எப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என அதிகம் கேள்விகளை எதிர்கொள்ளும் நடிகராக பிரபாஸுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பாலகிருஷ்ணா இவரிடம் எப்போது உங்களது திருமணம் என கேட்டதற்கு, பிரபாஸ் திருமணம் முடிந்த பின்னரே என் திருமணம் என்றார். அதுபற்றி பிரபாஸிடம் கேட்டதற்கு, அவரோ சல்மான்கான் திருமணம் முடிந்த பின்னர்தான் என் திருமணம் என பதில் கூறி சமாளித்தார்.

இந்த நிலையில் தற்போது சர்வானந்துகு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 26ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் ஸ்ரீகாளகஸ்தி தொகுதியில் பலமுறை எம்எல்ஏ பொறுப்பு வகித்த மறைந்த போஜல கோபாலகிருஷ்ண ரெட்டியின் பேத்தியை தான் இவர் திருமணம் செய்ய இருக்கிறார். மணமகள் அமெரிக்காவில் படித்து, வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.