புதுடெல்லி: இணையத்தில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் சாலை விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும். சில விபத்து வீடியோக்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தைம் கூட ஏற்படுத்தும். மயிரிழையில், அதிர்ஷ்டவசமாக உயிர்ன் தப்பிக்கும் வீடியோ ஒன்று அந்த வகையில் வைரலாகி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷு கப்ரா பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஓடும் டிரக் மீது ஏறக்குறைய மோதிய பிறகு, மயிரிழையில் ஒரு நபர் மரணத்திலிருந்து தப்பிக்கும் சிசிடிவி காட்சிகளை வீடியோவில் காணலாம். குழப்பமான காட்சிகள் ஆன்லைனில் வைரலாகி 91,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் முழு வேகத்தில் சாலையை கடப்பதை வீடியோவில் காணலாம். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பெரிய டிரக் அந்த சாலையில் வந்தது., ஏறக்குறைய பைக் மீது மோதுவதைக் வீடியோவில் காணலாம். அதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட மோதி விட்ட நிலையிலும், பைக்கை ஓட்டிச் சென்றவர் சம்பவத்தில் காயமின்றி தப்பினார். லாரி ஓட்டுநர் பைக் மீது இடிக்காமல் இருக்க லாரியை திருப்பியதில் லாரி சாலையை விட்டு அகன்று சென்று புதருக்குள் நுழைந்தது.
“விபத்து நடக்காத அளவுக்கு வேகத்தை பராமரிக்கவும். மற்றவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்… நீங்களும் பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்று வீடியோ கூறுகிறது.
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
ऐसी गति राखिये, दुर्घटना कभी ना होय,
औरन भी सुरक्षित रहै, आपौ सुरक्षित होय. pic.twitter.com/Gvy6B96EdD— Dipanshu Kabra (@ipskabra) January 5, 2023
91,000 பார்வைகள் மற்றும் பல எதிர்வினைகளைப் பெற்றுள்ளது. கருத்துகள் பிரிவில் அந்த நபரை “அதிர்ஷ்டசாலி” என்று குறிப்பிட்ட நெட்டிசன்கள், பைக் ஓட்டுநருக்கு அறிவுரைகளையும் அள்ளி வழங்கியுள்ளது. ட்விட்டர் கமெண்ட்டில் ஒருவர், “இல்லை! டூ வீலர்தான் தவறு செய்துள்ளார்” என்று கூறினார். “பைக் ஓட்டுபவர் ட்ரக் ஓட்டுநருக்கு நன்றி சொல்ல வேண்டும். டிரக் ஓட்டுநர் வாகனத்தை திருப்பி பைக் ஓட்டுநரின் உயிரைக் காப்பாற்றினார்” என்று வேறொரு பயனர் குறீப்பிட்டுள்ளார். ” சாலை விபத்துக்களை பொறுத்தவரை 2 சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட இறப்புகளில் 90% 2 சக்கர வாகனத்தின் தவறுதலால் தான் ஏற்படுகிறது!” என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.