டெல்லி கார் விபத்தில் உயிரிழந்த அஞ்சலி சிங்; குடும்பத்திற்கு உதவிய ஷாருக்கான்.!

வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அஞ்சலி சிங், 20, என்ற இளம் பெண் சென்ற இருசக்கர வாகனம் மீது, மது போதையில் 5 பேர் வந்த கார் மோதியது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அஞ்சலி சிங்கின் இருசக்கர வாகனம் மீது காரில் மோதிய கும்பல், காரை நிறுத்தாமல் சென்றுள்ளது. இருசக்கர வாகனத்தை காரில் இழுத்துக் கொண்டே சென்ற நபர்கள், அஞ்சலி சிங் இருப்பதை மறந்து வேகமாக சென்றனர்.

இதில் இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்கு அடியில் சிக்கிய அஞ்சலி சிங்கின் உடல்கள் கிழிந்தன. இதில் அவர் உயிரிழந்தார். இது கூட தெரியாமல், அஞ்சலி சிங்கின் உடலுடன், சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை அந்த நபர்கள் இயக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை கஞ்சவாலா என்ற சாலையில் கடை வைத்து இருக்கும் தீபக் டாஹியா என்ற நபர் பார்த்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், “அதிகாலை 3.30 மணி அளவில் தூங்கிக் கொண்டு இருந்த போது வெளியே டமார் என்ற சத்தம் கேட்டது. கார் டயர் வெடிப்பு சத்தம் என நான் நினைத்தேன். ஆனால், காரில் இருசக்கர வாகனத்துடன் இளம்பெண் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டார்.

காரை நிறுத்த முயன்றேன். ஆனால் அவர்கள் காரை நிறுத்தவில்லை. ஒரே இடத்தில் பல முறை அந்த இளம்பெண்ணுடன் கார் வந்தது. சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த பெண் உடலை இழுத்துச் சென்றிருப்பர். இதையடுத்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டேன்,” என்றார்.

சுல்தான்புரி போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 4.40 மணிக்கு சுல்தான்புரி பகுதியில் இளம் பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். கார் நம்பரை வைத்து, அந்த காரில் பயணம் செய்த கிரெடிட் கார்ட் ஏஜென்ட், ரேஷன் கடை ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

“எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் விபத்தை ஏற்படுத்தவில்லை. நாங்கள் காரில் சென்று கொண்டு இருந்தோம். உள்ளே பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தோம். அதனால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எங்களை போலீஸ் கைது செய்த போது தான் இந்த சம்பவமே எங்களுக்கு தெரிந்தது,” என, கைது செய்யப்பட்ட 5 பேரும் தெரிவித்து உள்ளனர்.

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஷங்கர் மிஸ்ரா பணியில் இருந்து டிஸ்மிஸ்!

இந்தநிலையில் உயிரிழந்த அஞ்சலி சிங் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கானின் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஷாருக்கானின் மீர் ஃபவுண்டேஷன் சார்பில் குறிப்பிடப்படாத நிதியுதவு வழங்கப்பட்டுள்ளது.கணவரை இழந்த குடும்பம், தாயின் மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையினருக்கு உதவும் வகையில், ஷாருக்கானின் தந்தை மீர் தாஜ் முகமது நினைவாக மீர் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அந்தவகையில் அஞ்சலி சிங் குடும்பத்தாருக்கு நிதியுதவு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.