சென்னை: சென்னையில் நாளை மராத்தான் ஓட்டம் நடைபெற உள்ள பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ரன்னர்ஸ் மராத்தான் நெடுந்தூர ஓட்டக் குழுவினரின் சார்பாக நாளை சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 04.00 மணி அளவில் மாரத்தான் ஓட்டம் துவங்க உள்ளது. அந்த ஓட்டத்தில் சுமார் 15,000 பேர் வரை கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது. […]
