
விஜய் சேதுபதியின் பார்சி பர்ஸ்ட் லுக் வெளியானது : பிப்., 10ல் ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் தற்போது நடித்து வருபவர் விஜய் சேதுபதி. 2019ல் வெளியான தி பேமிலி மேன் என்ற வெப்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள பார்சி என்ற வெப் தொடரில் தற்போது நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி, சாகித் கபூர் இணைந்து நடித்துள்ள இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி, சாகித் கபூர் ஆகிய இருவரின் தோற்றங்கள் உள்ளன. இத்தொடரில் ராஷி கண்ணாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கிரைம் த்ரில்லரில் உருவாகி உள்ள இந்த வெப் தொடரின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தமிழில் டப் செய்து வெளியிட எண்ணி உள்ளனர்.