இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் அமைப்புகளை ‘ரா’ எனும் உளவு அமைப்பு கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில் ‘ரா’ அமைப்பு உள்துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ள ரகசிய அறிக்கையின்படி விடுதலைப்புலிகள் மீண்டும் செயல்பட தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பணம் வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தலை தூக்க உள்ள விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு அரசியல் ரீதியில் ஆதரவு அளிக்கப்பட்டு வருவதாகவும்; எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பல முக்கிய முயற்சிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொள்ளும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.