தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் அன்றாடம் காலை 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. முக்கிய தினங்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூடப்படுவது வழக்கம். அந்த வகையில்,ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வருகின்றது.
அதன்படி திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படும் ஜனவரி 15ஆம் தேதியும், குடியரசு தினம் கொண்டாடப்படும் ஜனவரி 26 ஆம் தேதியும், வள்ளலார் நினைவு தினமான ஜனவரி 30 ஆம் தேதியும் டாஸ்மாக் கடை தமிழகத்தில் இயங்காது.
இந்த தினத்தில் மது விற்பனை இல்லாத தினங்களாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது மேலே குறிப்பிடப்பட்ட நாட்களில் அனைத்து மது கடைகள் மற்றும் பார்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் முக்கிய விதிமுறை ஆகும்.
அதன்படி தமிழகத்தின் மாவட்டங்களில் இருக்கும் ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்து அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வருகின்றனர்.