பஞ்சாப் அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம்; முதல்வர் பகவந்த் மான் காட்டம்.!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் பிராந்தியப் போக்குவரத்து அதிகாரியாக நியமிக்கப்பட்ட நரீந்தர் சிங் தலிவால், டிரான்ஸ்போர்ட்டர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக மாநில ஊழல் தடுப்பு பிரிவால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரி சட்ட விரோதமாகவும், தவறாகவும், தன்னிச்சையாகவும், உரிய நடைமுறையும் இல்லாமலும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கம் கூறியது.

இந்தநிலையில் சக சிவில் சர்வீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலத்தில் உள்ள அரசுப் பணியார்கள் இன்று முதல் 5 நாள் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநில அரசுப் பணியாளர்கள் இன்று மதியம் 2 மணிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் முதல்வர் பகவந்த் மான் இன்று எச்சரித்துள்ளார்.

மாநில விஜிலென்ஸ் பீரோவால் லூதியானாவில் பிசிஎஸ் அதிகாரி நரீந்தர் சிங் தலிவாலைக் கைது செய்ததை எதிர்த்து திங்கள்கிழமை தொடங்கி அதிகாரிகள் ஐந்து நாள் வெகுஜன சாதாரண விடுப்பில் சென்றதால், மாநிலத்தில் உள்ள நிர்வாக அலுவலகங்களில் சேவைகள் பாதிக்கப்பட்ட பின்னர், பகவந்த் மானின் கடுமையான நிலைப்பாடு வந்துள்ளது.

இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பதிவில், “வேலைநிறுத்தம் என்ற போர்வையில் சில அதிகாரிகள் பணிக்கு வரவில்லை என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மக்கள் தன்னை வழிபட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்; ராகுல் காந்தி பேட்டி.!

இந்த அரசாங்கம் ஊழலை சகித்துக் கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்கட்டும். இதுபோன்ற வேலைநிறுத்தம், மிரட்டலுக்கு சமம் மற்றும் அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைக்கு எதிரானது. பொறுப்புள்ள எந்த அரசாங்கத்தாலும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, வேலைநிறுத்தமானது சட்டவிரோதமானது என அறிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்குள் அதாவது 11.01.2023க்குள் சேராத அனைத்து அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்படுவர்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.