சென்னை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையில் இரட்டைக் கொலையுடன் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையில் இரட்டைக் கொலையுடன் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.
இதற்காக பெண்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் கொள்ளையர்களுக்கு திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு துணிச்சல் வந்திருக்கிறது என்பதும் தமிழ்நாட்டின் இன்றைய சட்டம் – ஒழுங்கின் நிலைக்கு ஒர் எடுத்துக்காட்டு.
இந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும். பாதிக்கப்பட்ட கண்ணங்கோட்டை செல்லையா குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” என்று தினரகன் குறிப்பிட்டுள்ளார்.