திருமணத்திற்கு சில மணி நேரம் முன் தூக்கத்தில் உயிரிழந்த லண்டன் பெண்! நள்ளிரவில் மணமகன் அதிர்ச்சி


லண்டனை சேர்ந்த இளம்பெண் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

லண்டன் பெண்

நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் Trinidad and Tobagoல் திருமணம் நடக்கவிருந்தது.
இந்த நிலையில் திருமணம் நடக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது, இது அவர் அருகே இருந்த டிவோனை அதிர்ச்சியடைய வைத்தது.

அதன்படி அவர் கடந்த மாதம் 7ஆம் திகதி மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என தற்போது தெரியவந்துள்ளது.
இதோடு நடியாவுக்கு கல்லீரல் நோய் இருந்தது அவரின் வருங்கால கணவர் டிவோனுக்கு தெரியாமலேயே இருந்திருக்கிறது.

திருமணத்திற்கு சில மணி நேரம் முன் தூக்கத்தில் உயிரிழந்த லண்டன் பெண்! நள்ளிரவில் மணமகன் அதிர்ச்சி | London Women Died In Sleep Before Marriage

நள்ளிரவில்…

மேலும் நடியாவுக்கு 10 வயதில் ஒரு மகனும் உள்ளான், முதல் கணவர் மூலம் அவர் அவன் பிறந்தான் என தெரிகிறது.
டிவோன் கூறுகையில், நடியாவின் திடீர் மரணம் என் மனதை சுக்குநூறாக்கிவிட்டது.

அவர் மிகவும் அன்பான, அக்கறையுள்ளவராக இருந்தார்.
அன்றைய தினம் நள்ளிரவு 2 மணிக்கு எனக்கு முழிப்பு வந்த போது அருகில் இருந்த நடியா கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்.

ஆனால், அவள் அசைவற்ற நிலையில் கிடந்தாள் என கண்ணீருடன் கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.