சென்னை: அதிக வரி வசூலில் நாட்டிலேயே தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் செய்தியளார்களிடம் பேசும்போது, வரி வசூலில் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு 4-வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.82,000 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், தமிழ்நாட்டில் வருமான வரி […]
