வற்புறுத்தி திணிக்கப்படும் வட மாநிலத்தவர்களால் பேராபத்து -தவாக தலைவர் வேல்முருகன்

T Velmurugan Press Meet: சேது சமுத்திரம் திட்டம் தொடங்கும் இடத்தில் ராமர் பாலம் இருக்கிறது என்று சொன்ன பாஜக, இப்போது இல்லை என்று கூறுகிறது. இது தமிழகத்திற்கும் திமுகவிற்கும் கிடைத்த வெற்றி என தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறி வருகிறது. வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் தவாக தலைவர் வேல்முருகன் கூறியது,

சேது சமுத்திரம் திட்டம். 150 ஆண்டுகாலம் கனவு திட்டம். இந்தியா தமிழகம் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பயன் உள்ளதாக இருக்கும். சேது சமுத்திரம் திட்டத்தில் மணலை அள்ளும் போது மண் சரிவு ஏற்படும் என்று சொல்கிறார். மேலும் அங்கு பவள பாறைகளுக்கு பாதிப்பு இல்லாமல் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். பல்லாயிரம் கோடி செலவு ஆகும் சேது சமுத்திரம் திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 

சேது சமுத்திரம் திட்டம் தொடங்கும் இடத்தில் ராமர் பாலம் இருக்கிறது என்று சொன்ன பாஜக, இப்போது ராமர் பாலம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இது தமிழகத்திற்கும் திமுகவிற்கும் கிடைத்த வெற்றி. நெய்வேலி என்.எல்.சிக்கு.நிலம் கொடுத்தவர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். அங்கு வேலை வாய்ப்பை உறுதி செய்து விட்டு நிலம் கையகப்படுத்த வேண்டும்.

வட மாநிலத்தவர்களால் தமிழகத்தில் கொலை நடக்கிறது. தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் வடமாநிலத்தவர்கள் தான் இருக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் வட மாநிலத்தவர்களுக்கு பணி கிடைக்கும் வழியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறி வருகிறது. இந்த அபாயத்தை தடுக்க வேண்டும். தமிழக அரசு இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. வட இந்தியர்களால் இன கலவரமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நான் வட மாநில அப்பாவி கூலி தொழிலாளிகளை எதிர்க்கவில்லை வற்புறுத்தி திணிக்கப்படும் வட மாநிலத்தவர்களை தான் எதிர்க்கிறேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.