வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளரின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டிற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவினை வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடும் வாக்குவாதம்
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பணியகத்தின் பொது முகாமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து, எதிர்வரும் சில தினங்களில் சாதகமான தீர்வு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் உறுதியளித்ததையடுத்து ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.