மதவழிபாட்டு தலத்திற்குள் நுழைந்ததால் தலித் இளைஞர் மீது தீப்பந்தம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் பைனொல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆயுஷ் (21). தலித் சமுகத்தைச் இவர் கடந்த 9-ம் தேதி அருகில் உள்ள கிராமமான சல்ராவில் உள்ள இந்து மத கோவிலுக்கு வழிபாடு நடந்தச் சென்றார்.
ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமுகத்தினர், ஆயுஷ் கோவிலுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தினர். மேலும், ஆயுஷை தீப்பந்தத்தால் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஆயுஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வழிபாடு நடத்த கோவிலுக்குச் சென்றபோது தன்னை தடுத்து நிறுத்தி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசார் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.