கொல்கத்தா: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க அமைப்பான யுனைடட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாள், ஊதிய உயர்வு, ஓய்வூதிய முறை புதுப்பிப்பு, தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30, 31 தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
