சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஊழியர்கள் பணிக்கு வருவதை நிறுத்தும்படியும் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக்கின் டிவிட்டர் தலைமயகமாக விளங்கும் அலுவக வாடகை பாக்கிக்காக அதன் உரிமையாளர்கள் ஊழியர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறிச் சென்றனர்.