தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்வு!: பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லி பூ ஒரே நாளில் ரூ.700 உயர்ந்தது..!!

குமரி: பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மல்லிகை, பிச்சி பூக்களின் விலை 2 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ஒன்றுக்கு 1,250 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சி பூ, இன்று 2000 ரூபாயாகவும், மல்லிகை 1700 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. அதேபோல் பொங்கலுக்கு அதிகமாக பயன்படும் கேந்தி பூ 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், ரோஜா 200 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும், செவ்வந்தி 160 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது. தாமரை பூ ஒன்று 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று 2500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ தற்போது 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் முல்லை கிலோ 2 ஆயிரத்துக்கும், பிச்சி பூ 2300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக கிலோ 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ தற்போது 3750 ரூபாய்க்கு விரணையாகிறது. பனிப்பொழிவு மற்றும் பொங்கல் விற்பனையால் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 3,500 ரூபாய்க்கும், பிச்சி பூ 2000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் முல்லை பூ 2000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.