சென்னை: நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்கள், மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மதவாத, இனவாத, தீவிரவாத அமைப்புகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. மேலும், குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் ஆதாரத்துடன் கூற வேண்டும், பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது என முதல்வர் தெரிவித்தார்.
