நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்று  ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 66 நாட்களுக்கு 27 அமர்வுகளுடன் நடைபெறும் என்று பிறகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப். 13 வரையும் 2-வது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரையும் நடக்கிறது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடைவெளி விடப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தின் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூட்டக்கூடத்தில் உரையாற்றுவார் என்று தெரிவித்துள்ளனர்.

2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை மொத்தமாக 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும். குடியரசுத் தலைவர் உரை, பட்ஜெட் தாக்கல், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.