பாதுகாப்பை மீறி பிரதமர் மோடியை நெருங்கிய இளைஞர் மீது நடவடிக்கை.!

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக பாஜக,
காங்கிரஸ்
மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அரசியல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். கர்நாடகாவில் மும்முனை போட்டி நிலவிவருகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் வலுவாக இருப்பது குறிப்பிடதக்கது. அதன்காரணமாக் அனைத்து கட்சிகளில் இருந்தும் முக்கிய தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெற்ற இளைஞர் தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடகா சென்றார். அங்குள்ள தார்வாட் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பேரணியாக சென்றார்.

காரின் கதவை திறந்து பக்கவாட்டில் நின்றபடி தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் அனைத்து பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி இளைஞர் ஒருவர் பிரதமருக்கு மாலை அணிவிக்க ஓடி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி இழுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆளும் மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பேரணியில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவிக்க வந்த இளைஞரை பிடித்து கர்நாடக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பிரதமருக்கு மாலை அணிவிக்க வந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து ஹூப்பள்ளியின் போலீஸ் கமிஷனர் ராமன் குப்தா கூறும்போது, ‘‘முதல் பார்வையில் இது பாதுகாப்பு மீறலாகத் தெரியவில்லை. இளைஞர் ஆர்வத்துடன் இதைச் செய்திருக்க வேண்டும், ஆனால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து; நுபுர் ஷர்மாவுக்கு துப்பாக்கி லைசென்ஸ்.!

அவர் (இளைஞன்) உள்ளூர்க்காரரா மற்றும் உற்சாக மிகுதியால் அவர் இதை செய்தாரா என்று நாங்கள் விசாரித்து வருறோம். உடனடியாக அவரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.