அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மிக நீளமான சலினாஸ் நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கலிபோர்னியாவை அடுத்தடுத்து தாக்கி வரும் புயலால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வெள்ள பாதிப்புக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் மீண்டும் 2 புயல்கள் தாக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சலினாஸ் நதியில் இருந்து வெளியேறிய நீர் மான்டேரி பகுதியில் உள்ள சாலையை மூழ்கடித்ததோடு, குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ வாய்ப்பு இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.