வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டேராடூன்: இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் உத்தரகண்டின் ஜோஷிமத் நகரம் டிச.,27 முதல் ஜன., 8 வரை 12 நாட்களில் 5.4 செ.மீ., அளவுக்கு புதைந்துள்ளது இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டம் ஜோஷிமத் நகரில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டன. சாலையில் பூமி வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நகரம் மண்ணுக்குள் புதையும் அபாய் உள்ளதாக எச்சரிக்கப்பட்டது. ஜோஷிமத் நகரம் நிலச்சரிவு அபாய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பாக வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். விரிசல் ஏற்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில் ஜோஷிமத் நகரை கார்டோசாட்- 2எஸ் செயற்கைகோள் மூலம் இஸ்ரோ படம் பிடித்துள்ளது. அதில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை புதையும் நிகழ்வு மெதுவாக நடந்து வந்துள்ளது. அந்த காலகட்டத்தில் 9 செ.மீ., மட்டுமே புதைந்துள்ளது.
ஆனால், டிச., 27 முதல் இந்தாண்டு ஜன., 8 வரை மட்டும் (12 நாட்களில்) 5.4 செ.மீ., அளவுக்கு சரிந்துள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக ஜோஷிமத் – ஒளலி சாலையும் கூட உருக்குலைந்து போகலாம் என்பது செயற்கைக்கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement