15 குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோலேடரில் சிக்கியுள்ளனர் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்த நகரம்
கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் சுரங்க நகரம் என்று அழைக்கப்படும் சோலேடாரை ரஷ்ய படைகள் வியாழக்கிழமை அன்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பில் தொடர்ச்சியான போர்க்கள பின்னடைவுகளுக்குப் பிறகு, சோலேடார் நகரத்தின் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு அரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
Sky News
ஆனால் நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்ததை உக்ரைன் தொடர்ந்து மறுத்து வருகிறது.
500 பேர் சிக்கி தவிப்பு
இந்த நகரை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மாஸ்கோ சார்புப் படைகளுக்கு எதிராக உக்ரைன் துருப்புக்கள் பல நாட்களாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் 15 குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு நகரமான சோலேடருக்குள் இன்னும் சிக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாஅ டொனெஸ்ட்க் கவர்னர் உக்ரேனிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 559 பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Sky News
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று தனது இரவு உரையின் போது சோலேடாரில் இரண்டு பிரிவுகளின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்ததை அடுத்து இது வந்துள்ளது.
அதில் துருப்புக்கள் “தங்கள் நிலைகளை தக்கவைத்து எதிரிகளுக்கு குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளார்.