அஜித் செய்த சம்பவங்கள்… பின்னுக்கு போன முன்னணி நடிகர்கள் – முழு பின்னணி

பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படம் ஒரே சமயத்தில் திரையரங்கில் இறங்குவது என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. 1950க்கு முன்பிருந்து தற்போது வரை இரு துருவ நட்சத்திரங்களின் படம் களமிறங்கி, ரசிகர்களுக்கு விருந்தாக அமைவது நடந்து வருகிறது. 

தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி சமயங்களில் தான் இதுபோன்ற இரு படங்கள் இறங்கி திரையரங்கை கல்லா கட்டா செய்யும். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்ற வழியில் விஜய் – அஜித் படங்களும் நெடுங்காலமாக போட்டியிட்டு தமிழ் திரையுலகில் போட்டியிட்டு வருகின்றனர். இதில், இவர்களின் படம் நேருக்கு நேர் பலமுறை மோதியுள்ளது.

இந்த பொங்கல் வாரிசுக்கா, துணிவுக்கா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, கடந்த சில வருடங்களாக அஜித் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் படங்களை வீழ்த்தி வசூலில் முன்னணி படைத்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. அதாவது, அஜித், விஜய்க்கு மட்டும்தான் போட்டி என கூறப்பட்டு வந்தாலும், அவர் தனது படங்களை வைத்து தனித்துவமான வசூல் சாதனையை படைத்திருக்கிறார் என்பது சற்று கவனிக்கப்படாமலே உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம். 

வீரம் – ஜில்லா

தற்போது, துணிவு – வாரிசு படங்களை போன்று கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் 2014இல் வீரம் – ஜில்லா படங்கள் வெளியாகின. இதில், விஜய் புதுமுக இயக்குநருடன் இணைந்து நடித்த ஜில்லா படம், ஓரளவு வசூலையே குவித்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாந வீரம் திரைப்படம் அதிகம் கொண்டாடப்பட்டு 50 நாள்களுக்கு மேலாக திரையரங்களில் ஓடியது. வீரம் – ஜில்லாவில் வீரமே வாகை சூடியதாக கூறப்பட்டது. 

வேதாளம் – தூங்கா வனம் 

பொதுவாக, கமல் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெருமளவு பேசப்படாது என்பதால் பலரும் இதனை மறந்துவிடுகின்றனர். 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு கமலின் தூங்கா வனம், வேதாளம் படத்துடன் களமிறங்கியது. வீரம் திரைப்படத்தை அடுத்து, சிவா – அஜித் கூட்டணி வந்த இந்த படம் விமர்சன ரீதியாக அடியாக வாங்கினாலும், வசூலில் தூங்கா வனத்தை தூக்கிச்சாப்பிட்டது என்றுதான் கூறவேண்டும். 

விஸ்வாசம் – பேட்ட

வசூல் மன்னன் பல தசாப்தங்களா தமிழ் சினிமாவில் வலம்வரும் ரஜினி, இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடன் பேட்ட படத்தில் இணைந்தார். இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும், விளம்பரமும் அதிகமாக இருந்த வேளையில், மிக சுமாரான விளம்புரத்துடன் வந்தது விஸ்வாசம் திரைப்படம். 2019ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான விஸ்வாசம் – பேட்ட திரைப்படங்கள் போட்டிப்போட்டு ஓடின. ஆனாலும், விஸ்வாசம்தான் அப்போதைய பொங்கல் வின்னர் என அறிவிக்கப்பட்டது. வாரிசு விஜய் வாய்ஸில் சொல்வது என்றால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக விஸ்வாசம் மாறியது.  இப்போதுவரை தொலைக்காட்சியில் கூட விஸ்வாசம்தான் ஆட்டிப்படைகிறது. 

கடந்த 9 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை விட அதிக வசூல் குவித்த அஜித், இந்த ஆண்டும் பொங்கல் வின்னர் என்றே கூறப்படுகிறார். ஆனால், அதற்கு சற்று பொறுமை காக்க வேண்டும் என்பது நிதர்சனமா உண்மை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.