சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் (வயது 32) நேற்றைய அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் ஓடி வந்தனர். அப்போது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தது அவருடன் பணிபுரியும் சக ஊழியர் பாலாஜி (வயது 24) என்பது தெரியவந்தது.
இது குறித்து அந்த பெண் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் பாலாஜியிடம் மேற்கொண்ட விசாரணையில் இன்னும் திருமணமாகாத பாலாஜி திருமணமான பெண் மீது ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.