கனடா: 2023-ன் முதல் எக்ஸ்பிரஸ் என்ட்ரி டிராவில் 5,500 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு


2023-ன் முதல் எக்ஸ்பிரஸ் என்ட்ரி டிராவில், கனடா 5,500 விண்ணப்பதாரர்களை அழைக்கிறது.

கனடா இந்த ஆண்டின் முதல் எக்ஸ்பிரஸ் என்ட்ரி டிராவில், குறைந்தபட்சம் 507 CRS (Comprehensive Ranking System) மதிப்பெண்களுடன் 5,500 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புகளை வழங்கியது.

குறைந்தபட்ச CRS மதிப்பெண் என்பது, எக்ஸ்பிரஸ் என்ட்ரி மூலம் கனடாவிற்கு குடியேற விரும்பும் திறமையான தொழிலாளர் வேட்பாளர்களை தரவரிசைப்படுத்தப் பயன்படுகிறது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 507 CRS மதிப்பெண், கடந்த ஆண்டு நவம்பர் 23 அன்று நடந்த முந்தைய டிராவை விட 16 புள்ளிகள் அதிகம்.

கனடா: 2023-ன் முதல் எக்ஸ்பிரஸ் என்ட்ரி டிராவில் 5,500 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு | 2023 Express Entry Canada Invites 5500 CandidatesImage From Freepic

நவம்பர் 23 அன்று நடந்த டிராவில், 4,750 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டனர், குறைந்தபட்ச CRS மதிப்பெண் 491-ஆக இருந்தது.

அடிக்கடி டிராக்கள் மற்றும் அழைப்பிதழ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வரும் மாதங்களில் குறைந்தபட்ச வரம்பு மதிப்பெண் மேலும் குறையும் என IRCC (Immigration, Refugees and Citizenship Canada) தெரிவித்துள்ளது.

CRSல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், ஒரு சுற்று அழைப்பிதழ்களில் அதிக ரேங்க் பெறும் வேட்பாளர்களுக்கு ITAகள் (Invitations To Apply) வழங்கப்படுகின்றன.

2023-ஆம் ஆண்டில், 82,880 புலம்பெயர்ந்தோர் எக்ஸ்பிரஸ் என்ட்ரி வழியாக கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக அனுமதிக்கப்பட உள்ளனர்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.