கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் 26ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜனவரி 16 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மதுபான கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷரவண் குமார் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் திருவள்ளுவா் தினம் ஜனவரி 16 மற்றும் குடியரசு தினம் ஜனவரி 26 ஆகிய 2 நாட்கள் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளார்.
மேலும், மேற்கண்ட நாள்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தாலோ, மதுக்கடைகள், விற்பனைக் கூடங்களை திறந்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளார்.