காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 12 சரவன் தங்க சங்கிலிகளை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பறித்துச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிங்கபெருமாள்கோவில் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் குணசுந்தரி.
60 வயதான அவர், இன்று காலை காந்திநகர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு பிறந்தநாள் விழாவிற்கு, உறவினர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த நபர், குணசுந்தரியின் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குணசுந்தரி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.