சென்னை: ’தமிழ்நாடு வாழ்க எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம்’ முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில்,” பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு, […]
