மதுரை: ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வந்த மதுரை குடும்பத்தினரை போலீசார் கைது செய்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்ல மாலை அணிந்து இச்செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே டூவீலரில் வந்த மதுரை சம்மட்டிபுரம் பாலமுருகன், மனைவி சிவராணியிடம் போலீசார் விசாரித்தனர். டூவீலரில் கஞ்சா பண்டல்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் அய்யனார் மனைவி உஷா, அப்பகுதி திருக்கம்மாள், ராஜீவ்நகர் ரேவதி ஆகியோர் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்துள்ளனர். குடும்பத்துடன் ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்று கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. மாட்டுத்தாவணியில் கஞ்சா பண்டல்களுடன் காத்திருந்த ரேவதி, உஷா, திருக்கம்மாளை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement