தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் பழைய பொருட்களை மக்கள் எரித்து போகிப் பண்டையை கொண்டாடினர். சென்னையில் பல பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்ததால் சாலைகளில் அடர் புகைமூட்டம் காணப்பட்டது.
இதனால் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று நச்சுத்தன்மை கொண்டதாக மாறியுள்ளது. அதிக புகைமூட்டத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் மின்விளக்கு எரியவிட்டபடி பயணம் செய்தனர்.
இந்த நிலையில் சென்னையில் கொண்டாடப்பட்ட போகி பண்டிகையால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஆலந்தூர், மணலி, பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களை எரிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.