லண்டன் ரயில் நிலையத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு: 7 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் கவலைக்கிடம்


பிரித்தானியாவின் மத்திய லண்டனில் உள்ள யூஸ்டன் ரயில் நிலையம் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 7 வயது சிறுமி மற்றும் மூன்று பெண்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் துப்பாக்கி சூடு

பிரித்தானியாவின் மத்திய லண்டனில் உள்ள யூஸ்டன் ரயில் நிலையத்திற்கு அருகே சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தேவாலயத்திற்கு அருகாமையில், இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளனர்.

லண்டன் ரயில் நிலையத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு: 7 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் கவலைக்கிடம் | Women In Hospital Shooting Near Uk Euston StationSky News

அத்துடன் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நகரும் வாகனத்தில் இருந்து நடத்தப்பட்டதாகவும், பின்னர் அந்த இடத்தில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை மற்றும் அவசர விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மருத்துவமனையில் அனுமதி

துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் லண்டனின் ஏர் ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள்  வரவழைக்கப்பட்டனர்.

லண்டன் ரயில் நிலையத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு: 7 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் கவலைக்கிடம் | Women In Hospital Shooting Near Uk Euston StationSky News

இதில் 48, 54 மற்றும் 41 வயதுடைய மூன்று பெண்கள் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை என்று கருதப்படவில்லை என்றாலும், 48 வயதான பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு வயது சிறுமியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவளுடைய நிலையும் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் ரயில் நிலையத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு: 7 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் கவலைக்கிடம் | Women In Hospital Shooting Near Uk Euston StationSky News



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.