ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஒன்றாம் தேதி தமிழரின் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக பொங்கல் பண்டிகை என்றால் அனைவரின் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, தான்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு பெருமை பெற்ற இடம் என்றால், மதுரை மாவட்டம் தான். அந்தவகையில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு விழா மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அதில், முதல் களமாக மதுரையில் உள்ள அவனியாபுரம் தயாராகி உள்ளது.
அதற்காக 320 மாடுபிடி வீரர்கள், ஆயிரம் காளைகள் என்று அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில் மற்றும் தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பே காளைகள் ஒன்றுக்கொன்று முட்டி இதுவரை மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.