உக்ரைனின் கிழக்கு மத்திய நகரமான டினிப்ரோவில் 9 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிபர் ஜெலன்ஸ்ஜி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய பயங்கரவாதம் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அதிக ஆயுதங்களை வழங்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.