என்னா அடி… பூமி அதிர தெறிக்க விட்ட டிஜிபி சைலேந்திர பாபு… கடைசியா ஒரு ட்விஸ்ட்!

தமிழ்நாடு முழுவதும் தைப் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதம் முதல் நாளான இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து கொண்டனர். இதையடுத்து சூரியனுக்கு நன்றி சொல்லும் வகையில் பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். குடும்பமாய் ஒன்றாய் பொழுதை கழிக்கும் வகையில் மிகவும் சிறப்பான நாளான நகர்ந்து கொண்டிருக்கிறது.

டிஜிபி பொங்கல் விழா

இந்நிலையில் தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் அவர்கள் சென்னை ஆவடியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி, சட்டையுடன் காணப்பட்டார். கறுப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மாஸாக காட்சி அளித்தார். இந்நிலையில் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக பறை இசைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பறை இசைத்து உற்சாகம்

இதில் இளைஞர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு உற்சாகமாய் பறையை இசைத்தனர். இதையடுத்து சைலேந்திர பாபு தானும் இசைக்க விரும்புவதாக ஆர்வத்தை வெளிப்படுத்தினார். உடனே அவருக்கு ஒரு பறை அளிக்கப்பட்டது. இதையடுத்து நடந்தது தான் ஹைலைட். பூமி அதிர உற்சாகம் கரை புரண்டு ஓட கை, கால்கள் துள்ளி குதிக்க பறையில் அடி வெளுத்து வாங்கிவிட்டார்.

வைரலாகும் வீடியோ

அப்படி ஒரு ஆனந்த புன்னகை. அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் அங்கிருந்த இளைஞர்களும் வேகமாக பறையை இசைக்க ஆரம்பித்தனர். அப்படியே அந்த மைதானமே குலுங்கும் அளவிற்கு சென்றுவிட்டது. இதனை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சிலர் வீடியோ எடுத்தனர். இந்த சூழலில் டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பறை இசைக்கும் வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.

திடீரென பதிவு நீக்கம்

இதற்கு 700க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்தனர். ஆனால் சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கியுள்ளார். இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியை இசைத்து வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டிய அவசியம் என்ன? எனப் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

பொங்கல் வாழ்த்து

இதற்கிடையில் வேறு சில பிரபலங்கள், ஊடகங்கள் சைலேந்திர பாபு ஐபிஎஸ் பறை இசைக்கும் வீடியோவை பதிவிறக்கம் செய்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். முன்னதாக இன்று காலை வெள்ளை வேட்டி, சட்டை உடன் பொங்கல் வைப்பது போன்ற புகைப்படத்துடன் “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். Happy Pongal” என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.