கடைசி நிமிட வீடியோ: 5 இந்தியர்களின் நிலை… நேபாள விமான விபத்து பற்றி தூதரகம் தகவல்!

நேபாள நாட்டில் இன்று காலை நடந்த விமான விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ட்வின் எஞ்சின் கொண்ட ATR-72 எனப்படும் யெதி ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டு போகாராவிற்கு சென்று கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க 5 நிமிடங்கள் இருந்த நிலையில் திடீரென கீழே விழுந்து நொறுங்கி பயங்கர விபத்தில் சிக்கியது.

72 பேரின் நிலை

இதையடுத்து மளமளவென தீப்பற்றி கொண்டது. இதுபற்றி தகவலறிந்து தீயணைப்பு பற்றி மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 68 பயணிகள், 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

நேபாள விமான விபத்து நடந்தது எப்படி? இந்தியர்கள் உட்பட 72 பேர்… பகீர் தகவல்!

கடைசி நிமிட வீடியோ

இந்நிலையில் விமான விபத்தில் சிக்கிய கடைசி நிமிட வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நேராக வந்து கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழ் நோக்கி விழுகிறது. இந்நிலையில் யெதி ஏர்லைன்ஸ் விமானத்தில் 5 இந்தியர்களின் பயணித்துள்ளனர். அவர்களின் நிலை என்னவென்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியர்கள் யார், யார்?

இதுதொடர்பாக விளக்கமளித்த நேபாளத்திற்கான இந்திய தூதரகம், விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து துறை ஆணையம் அளித்த தகவலின்படி, விபத்தில் சிக்கிய யெதி ஏர்லைன்ஸ் விமானத்தில் அபிஷேக் குஷ்வாஹா, பிஷால் ஷர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகிய 5 பேர் பயணித்துள்ளனர்.

அவசர தொடர்பு எண்கள்

அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் நேபாளத்தில் உள்ள தூதரகத்தை தொடர்பு கொள்ள விரும்பினால் காத்மாண்டுவில் ஸ்ரீ திவாகர் ஷர்மா +977-9851107021 என்ற எண்ணிலும், போகாராவில் லெப்டினன்ட் கர்னல் ஷஷாங் திரிபாதி +977-9856037699 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழிதான்; இலங்கை அதிபர் உறுதி.!

அவசர கூட்டத்திற்கு அழைப்பு

நேபாள நாட்டு அதிகாரிகள் உடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தகவல் தொடர்பில் இருக்கிறது. நிலைமையை மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாள பிரதமர் புஷ்பா கமல் தாஹல் பிரசண்டா, அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் விமான விபத்துகள் நடைபெறுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.