கனடாவில் சாலையில் படுத்திருந்த பெண்ணை கண்ட ஓட்டுனர்! சில நிமிடங்களில் மரணம்


கனடாவில் சாலையில் படுத்தபடி கிடந்த பெண்ணொருவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
மொண்றியலில் தான் இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.

அங்குள்ள டிகாரி பவுல்வர்ட் சாலையில் பெண்ணொருவர் சாலையில் படுத்தபடி இருந்தார்.
இதை பார்த்த அவ்வழியாக வந்த ஓட்டுனர் 911க்கு தகவல் தெரிவித்த நிலையில் அவசர குழுவினரும், பொலிசாரும் அங்கு வந்தனர்.

அப்போது 40 வயதான பெண்ணை பரிசோதித்த போது அவர் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக தெரியவந்தது.

கனடாவில் சாலையில் படுத்திருந்த பெண்ணை கண்ட ஓட்டுனர்! சில நிமிடங்களில் மரணம் | Canada Police Investigate Death Women Road

Stéphane Grégoire/Radio-Canada

அப்பெண் பலத்த காயத்துடன் கிடந்தார் எனவும், வாகனம் மோதியதன் விளைவாக அது ஏற்பட்டிருக்கலாம் என கருதுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.