புதுடெல்லி: டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கை தொடர்பாக துணைமுதல்வர் சிசோடியா உட்பட பலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிசோடியாவிடம் சிபிஐ பலமுறை பல மணி நேரம் விசாரணை நடத்தியது சோதனையும் நடத்தியது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள சிசோடியாவின் அலுவலகத்தில் மீண்டும் சோதனை நடத்தினர்.
