பாமகவின் 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் – அன்புமணி அறிவிப்பு

பாமக
தலைவராக பொறுப்பேற்றுள்ள
அன்புமணி
ராமதாஸ், வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டார். இதன் மூலம் பாற்றாளுமன்ற தேர்தலில் அதிமுகவை கழட்டிவிட்டுள்ள பாமக, 2024 சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என தெரிகிறது.

மேலும், பாமக தலையில் ஆட்சி அமையும் என்று அன்புமணி தெரிவித்திருப்பது, பாமக தலைமையில் அதிமுக கூட்டணி அமைக்கலாம் என்றே அவர் மறைமுகமாக கூறியுள்ளார். ஆனால், அதை அதிமுக விரும்பாது என்பதால் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்காது என்பது உறுதியாகியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து பல இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பாமகவில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு அமைப்புகளில் 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்த அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; அரசியல், சமூகம், மொழி,கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்காகவும், உரிமைகளை வென்றெடுக்கவும் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுவரை 34 அமைப்புகளை தொடங்கியுள்ளார்.

அதில் முதல்கட்டமாக 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வரும் 18-ம் தேதி காலை தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில், ராமதாஸ் முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடக்க உள்ளது.

இதில் பாமக, வன்னியர் சங்கம், பசுமைத் தாயகம், சமூக முன்னேற்ற சங்கம், தொழிற்சங்கப் பேரவை, வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை, சமூக ஊடகப் பேரவை, உழவர்கள், படைப்பாளிகள் பேரியக்கங்கள், அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, இளையோர் மேம்பாட்டு இயக்கம், வன்னியர் இன மான, உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம், அரசு அலுவலர் பணியாளர்கள் உரிமை நலச் சங்கம், ஆசிரியர்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம், இளைஞர், மாணவர், மகளிர், இளம்பெண்கள் சங்கங்கள் ஆகிய 19 அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்களுடன், பாமக தேர்தல் பணிக்குழு, கொள்கை விளக்க அணிகளின் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.