மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10-வது சுற்றின் முடிவில் 658 காளைகள் காலத்தில் இறக்கப்பட்டன. அதில் 23 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் முதலிடத்தில் உள்ளார். 15 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் 2-வது இடத்தில் உள்ளார்.