
செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சியின் வழியாக காலை 10:30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலா அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தபடி பங்கேற்கின்றனா்.
இந்த சேவை, இந்திய ரயில்வே துறையால் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். தெலுங்கு மொழி பேசும் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோ மீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவை இது.

இந்த வந்தே பாரத் விரைவு ரயில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in