இன்றும், நேற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி முதலே பஸ், ரெயில் மற்றும் இருசக்கர வாகனம், கார்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் மேற்கொண்டனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து நாளை மாலை முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் சென்னை திரும்புவார்கள்.
கூட்ட நெரிசலை தவிர்க்க சிலர் ஒரு நாள் கழித்தும், இன்று மாலை முதலும் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது சென்னையில் பாதி மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், சென்னை மாநகர் முழுவதும் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மெரினா கடற்கரை செல்லும் சாலையை தவிர மற்ற சாலைகளில் வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது.