செ‘ன்னை: திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காமராஜர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டின் திருவள்ளுவர் விருது மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்த்துறை விருதுகளை முதலமைச்சர் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அதன்படி, 2022ம் ஆண்டுக்கான விருதுகள் 9 பேருக்கு வழங்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் விருதை […]
