வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த இளைஞர்கள் கொஞ்சும் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த வீடியோ வைரலாகியுள்ளது.
நம் தாய் மொழியை வேறு ஏதேனும் மாநிலங்களிலோ, நாடுகளிலோ பேசுவதை கேட்கும்போது வரும் மகிழ்ச்சி உணர்வுக்கு அளவிருக்காது. அப்படி இருக்கையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு தமிழ் மொழியில் சீனர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
சீனாவில் உள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன.

2017ம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து சில இடங்களில் தமிழ் மொழி பேசுபவர்களும் இருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீனாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் சிலர், ‛இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்றும், ‛பொங்கலோ.. பொங்கல்’ எனவும் தங்களுடைய இருப்பிடத்தையும் தமிழில் பேசி வீடியோ வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement