போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்திற்கு அமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான பிரதேசமாக சீதாவக்கையை மாற்றும் நோக்கில், ‘சீதாவாக்கை ஒடிஸி’ என்ற சொகுசு சுற்றுலா ரயில் சேவை நேற்று (15) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பமானது.
கொழும்பு கோட்டையில் இருந்து வக நோக்கி இந்த ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் அந்த பிரதேசத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்காக மேல் மாகாண சுற்றுலா சபையுடன் இணைந்து வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இந்த புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான யாதமினி குணவர்தன, மதுர விதான, மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் ரயில்வே பொது முகாமையாளர், அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.