வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மற்றொரு ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் உள்ளது. . இதன் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி இந்தியாவிற்கு எதிரான வார்த்தைகளையும் எழுதினர். ஹிந்துக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும், கொடூர செயலுக்கு பல்வேறு தலைவர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
![]() |
இந்நிலையில் இன்று மெல்போர்ன் நகரின் கேரம் டவுன் என்ற பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவ விஷ்ணு கோயில் உள்ளது. இக்கோயில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement