2023-ம் ஆண்டு நாடு முழுவதும் 9 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு பாஜகவுக்கு மிக முக்கியமான காலம் எனலாம். இந்த 9 மாநில சட்டசபை தேர்தல்களில் வெல்வதற்கு பாஜக தனது உத்திகளை வகுக்க தொடங்கி விட்டது. உள்ளது. இந்நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்றும் இன்றும் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 35 மத்திய அமைச்சர்கள், 12 மாநிலங்களின் முதல அமைச்சர்கள், பல மாநில தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 2024 தேர்தலின் போது அமைப்பை வழிநடத்த வாய்ப்பளிக்கும் வகையில் வகையில் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டில் தலைவராக இருந்த அமித்ஷா அவர்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதை போல, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலமும் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் 2019-ஐ விட அதிக தொகுதிகளை பெற்று வெற்றி பெறுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி கூறினார். அவரைப் போன்றே கட்சியின் முன்னாள் தலைவரான பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நட்டாவின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் யோசனையை இதற்கு நிர்வாகி ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர்.
கட்சியில் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள், அடுத்த ஆண்டு, ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கலாம் என கூறப்படுகிறது. கட்சி மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், வெற்றி பெறுவதில் அரசு முனைப்பாக செயல்படுகிறது என்பதை இந்த நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர் நட்டா தலைமையில் பாஜக கடந்த பொதுத் தேர்தலை விட மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று ஷா நம்பிக்கை தெரிவித்தார். கோவிட்-19 பரவல் காலத்தில் மக்கள் சேவையுடன் கட்சி அமைப்பை இணைத்ததாகக் கூறி, நட்டாவின் தலைமைத்துவத்தை அமைச்சர் பாராட்டினார். நட்டாவின் கீழ் பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் கட்சி வெற்றி பெற்றதாகவும் ஷா குறிப்பிட்டார்.